திரைச்செய்திகள்

மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிக்கிறார் நயன்தாரா. ஆனால் அதற்கு முன்பே அம்மன் தாயி என்ற படத்தில் நடித்தார் பிக் பாஸ் ஜுலி.

இந்த சினிமா வாழ்வு எங்கிருந்து வந்தது அவருக்கு? ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஓரமாக நின்று கோஷம் போட்ட ஜுலியை நிருபர் ஒருவர் போட்டோ எடுத்து வலை தளத்தில் போட பற்றிக் கொண்டது புகழ். அப்படியே மெல்ல பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தவருக்கு அடுத்தடுத்த சினிமா அழைப்புகளும் வந்ததில் ஆச்சர்யமில்லை.

எல்லாமே கண்மூடித் திறப்பதற்குள் ஸ்டாப்! அவர் நடித்த முதல் படத்தை சீண்டக்கூட ஆளில்லை. இவரே தேடி தேடிப் போய் வாய்ப்புகள் கேட்டாலும், சந்திக்கவே விரும்புதில்லையாம் பல இயக்குனர்கள். ‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் ஜுலி!

தனக்கொரு காதலர் இருப்பதாக அவர் கூறாவிட்டாலும் எல்லா கம்பெனிகளுக்கும் அவருடன் போய் வருவதுதான் இந்த புறக்கணிப்புக்கு காரணமாம்.