திரைச்செய்திகள்

சினிமாவை கெடுக்க சினிமாக்காரர்களே போதும். ஒரு கோடீஸ்வரன் கிடைத்தால் அவரை லட்சாதிபதியாக்குவதும், லட்சாதிபதி கிடைத்தால் அவரை ஆயிரங்களுக்கு அலைய விடுவதும் இயக்குனர்களும் ஹீரோக்களும்தான்.

நாற்பது கோடியில் எடுத்துத் தருவதாக சொன்ன ஆக் ஷன் படத்தின் பட்ஜெட்டை  ஐம்பத்து மூன்று கோடி வரை இழுத்துத் தள்ளிவிட்டார் சுந்தர்சி. தயாரிப்பாளர் டிரைடன்ட் ரவிந்தரன் ஃபுல் டென்ஷன் ஆகியிருந்தாராம்.

நேரில் வந்த சுந்தர்சியும் விஷாலும் ஆளுக்கொரு படம் தனித்தனியா பண்ணித் தர்றோம் என்று சமாதானப்படுத்த, ‘மேலும் குழியில தள்ளணுமா? போயிட்டு வாங்கப்பா...’ என்று கை கூப்பினாராம். அதற்காக பணத்தை விட்டுத்தர முடியாதல்லவா? ரொக்கமாக அவர்களிடமிருந்து கறப்பதற்கு பஞ்சாயத்தை கூட்டிவிட்டாராம்.