திரைச்செய்திகள்

தமிழ்சினிமாவில் ஒரு தனித் தீவு இருக்கிறதென்றால் அது அஜீத்தின் வசிப்பிடம்தான். முன்னணி இயக்குனர்களாகட்டும், தயாரிப்பாளர்களாகட்டும்... அஜீத்துக்கு ஒரு ஹலோ சொல்ல வேண்டும் என்றாலும் ஆயிரம் தடைகளை தாண்ட வேண்டி இருக்கிறது.

அநேகம் பேர் அவரை சினிமாவில் பார்ப்பதோடு சரி. இந்த நிலையில்தான் அவருக்கு ஒரு கதை சொல்ல ஆசைப்பட்டாராம் வெற்றிமாறன். எல்லா ஹீரோக்களும் எனக்கு உனக்கு என்று இவரை அழைத்துக் கொண்டிருக்கும் போது அஜீத் தரப்பிலிருந்து வந்த பதிலென்ன தெரியுமா? ‘சாருக்கு தேவைப்பட்டா அவரே கூப்பிடுவார்!’

இந்த பதிலால் நொந்து போன வெற்றிமாறன், போகிற வருகிற பிரஸ்காரர்களிடமெல்லாம் இந்த விஷயத்தை சொல்லி சொல்லி மாய்ந்து போகிறார்.