திரைச்செய்திகள்

திடீர் பல்டி அடித்துவிட்டார் ஸ்ரீரெட்டி. எல்லாம் உதயநிதி விவகாரம்தான். அவர் மீது அபாண்டமாக பாலியல் குற்றச்சாட்டை தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் அவர்.

விவகாரம் நாராசம் ஆவதற்குள் ரெட்டியை நசுக்கிவிட்டார்கள் போல. அப்படியே ட்விஸ்ட் அடித்துவிட்டார். நான் போடாத கருத்தை போட்டதா சொல்றாங்க. யாரோ என் பெயர்ல அப்படியொரு வேலையை செஞ்சுட்டாங்க. எனக்கு கலைஞர் குடும்பம் மீது நிறைய மரியாதை இருக்கு என்று பிரஸ்மீட் வைத்து பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

அவரை பின் தொடரும் பலரும், இந்த பொண்ணு ஏன் இப்படி ஜகா வாங்குச்சு? அது அவரது அதிகாரபூர்வமான வலைதள பக்கம்தானே என்கிறார்கள். அணில்னு நினைச்சு பாம்பு முதுகுல கோடு போடலாம்னு நினைச்சா இப்படிதான்.