திரைச்செய்திகள்

இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் தீராத பிரச்சனை இதுதான். தயாரிப்பாளர் சங்கம் எவ்வளவோ முயற்சித்தும் ஒரு இஞ்ச் கூட முன்னேற்றம் இல்லாத பிரச்சனையும் இதுதான்.

ஒரு குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமென்ட் போட்டுக் கொள்வது. படத்தை டெலிவரி எடுக்க வரும்போது வெறுங்கையோடு வந்து பஞ்சாயத்தை கூட்டுவது. இப்படி சினிமா ரிலீஸ்களை திகிலாக்கி வரும் விநியோகஸ்தர்களால் பல தயாரிப்பாளர்கள் நிலை குலைந்து போயிருக்கிறார்கள்.

‘தர்பார்’ ரிலீசில் அப்படியொரு பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்த லைகா, படத்தை விலைக்கு கேட்டு வரும் விநியோகஸ்தர்களுக்கு இன்டர்வியூ வைக்கிறதாம். வளைத்து வளைத்து கேள்வி கேட்பதால், பலர் ஓட்டம்! சுமார் 14 விநியோகஸ்தர்கள் இப்படி ஓட்டம் எடுத்திருக்கிறார்கள்.

இப்போது தாணுவே முன் வந்து, நான் வேணா வாங்கிக்கட்டுமா? என்கிறாராம். கொடுப்பாங்களா, மாட்டாங்களா? ஏன்னா முடிவெடுக்கிற அதிகாரம் ரஜினிகிட்டயில்ல இருக்கு?