திரைச்செய்திகள்

சீனுராமசாமி இயக்கி யுவன்சங்கர்ராஜா தயாரித்திருக்கும் ‘மாமனிதன்’ படத்தில் விதவிதமான பஞ்சாயத்துகள். நீட்டுகிற இடத்திலெல்லாம் யார் யாருக்கோ ஜாமீன் கையெழுத்துப் போட்டிருக்கிறாராம் யுவன். அவ்வளவு கடனும் இந்த படத்தில் வந்து நிற்கிறது.

இந்த குறை போதாதென, சிந்துபாத் பட ரிலீஸ் நேரத்தில் சில கோடிகளுக்கு பொறுப்பேற்று அதிலும் கையெழுத்து போட்டிருக்கிறாராம். அவர்களும் வந்து கட்டைய போட, மாமனிதன் நிலைமை பரிதாபத்திலும் பரிதாபம்.

தயாரிப்பாளர் சங்கத்தில் வைத்து அலசினால் நாலாபுறமும் நியூஸ் கசிந்துவிடுகிறது என்பதால் பாரதிராஜா வீட்டில் வைத்து பஞ்சாயத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கண்ட இடத்திலும் கையெழுத்து போட்ட யுவன் வராமல் தன் மேனேஜரை அனுப்பி பஞ்சாயத்தில் உட்கார வைத்திருக்கிறார்.