திரைச்செய்திகள்

கமலஹாசனும் , ரஜினிகாந்தும், ஒருதிரைப்படத்தில் இணைவதாக ஆங்கிலநாளிதழ் ஒன்று வெளியிட்ட செய்தியால் பரபரக்கிறது சினிமா உலகமும், இருவரது ரசிகர் கூட்டமும்.

கமலின் ராஜ்கமல் பிலிஸ் தயாரிப்பில் லோகேஸ் கனகராஜின் இயக்கத்தில், ரஜினி நடிக்கிறார் என்பதுதான் அந்தச் செய்தி. விசாரித்ததில் அப்படி ஒரு விசயமே இல்லை என்கிறது சம்பந்தப்பட்டவர்கள் தரப்பு. இதைவிட சினிமாவுலகின் முக்கியமானவர்கள் சிலர் சொல்வதுதான் அல்டிமேட்.

கமலும், ரஜினியும், நல்ல நண்பர்கள்தான். ஆனால் அதற்காக அரசியலில் இணைவது என்பதெல்லாம்  சாத்தியக்குறைவானது. அப்படியிருக்க சினிமாவிலா? போங்கப்பு போய் போய் ஆகிறதபப் பாருங்க எனத் தலையிலடித்துக் கொள்கிறார்கள்.

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்