திரைச்செய்திகள்
Typography

பாட்ஷா படத்தை நாலு ரூபாய் டிக்கெட்டு வாங்கி, அடிச்சு அள்ளிப் படம் பார்த்த பலரில் நானும் ஒருவன். அப்படியான நானே இப்பொது அவரோட நடிச்சா எப்படி இருக்கும் என்று யோசிசுப் பாருங்க என்றார் யோகி பாபு.

சூப்பர் ஷ்டார் ரஸினிகாந்தின் நடிப்பில், உருவாகி வரும் "தர்பார்" படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போதே மேற்கண்டவாறு கூறினார் நடிகர் யோகிபாபு.

அவரிடம் மேடையில் வைத்துக் தொகுப்பாளார்கள், ஆர்யாவிடம் கேட்டார்கள் எப்போது கல்யாணம் என்று, அவருக்கு ஆயிற்று. காமெடி நடிகர் சதீசுக்கு எப்போ கல்யாணம் என்றார்கள். அவருக்கும் ஆயிற்று. இப்போ உங்களுக்கு எப்போ கல்யாணம் என ரசிகர்கள் கேட்கிறார்கள். உங்கள் பதிலென்ன எனக் கேட்டார்கள்.
அதற்கு யோகிபாபு, நாட்டில எவ்வளவு பிரச்சினை இருக்கு. இப்போ என் கல்யாணம்தான் பெரும் பிரச்சனையா? என எதிர்க்கேள்வி கேட்டவர், கவலைப்படாதீங்க சீக்கிரமே நடந்துடும் எனச் சிரித்தபடி சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்