திரைச்செய்திகள்

வடிவேலு எப்போது திருந்த முற்பட்டாலும் அவர் வாய் அதை செய்ய விடுவதே இல்லை. லேட்டஸ்ட் நிலவரம். ‘தலைவன் இருக்கின்றான்’ படம்தான் வடிவேலுவுக்கு ரீ என்ட்ரி! அதற்குள் அவர் சுட்ட வடை அவருக்கே அஜீரணத்தை தரும் போலிருக்கிறது.

‘எனக்கு எதிரா கொஞ்ச பேரு செயல்பட்டுகிட்டு இருக்காய்ங்க. சும்மா பத்து பேரு உட்கார்ந்துகிட்டு பஞ்சயாத்து பண்றேன்னு வடைய மென்னுகிட்டு வடிவேலுவுக்கு ரெட் போட்டுடலாம்னு பார்க்குறாய்ங்க. அது நடக்காது’ என்று மீண்டும் ஒரு பேட்டியை தட்டிவிட்டிருக்கிறார்.

சேட்டுக் கடை வட்டி மாதிரி சேர்ந்து கொண்டேயிருக்கிறது வடிவேலுவின் வாய்மொழிகள். மொத்தமா வச்சு மூட்டையில கட்டுவாங்களோ என்னவோ?

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா அலை முடிந்தபிறகுதான் அஜித் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று அஜித் தரப்பில் முதல் கூறப்பட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரடி கட்சி அரசியலில் ஈடுபட போவதாக கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி அறிவித்தார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்