திரைச்செய்திகள்
Typography

தனக்கு வலி என்று புலம்புகிற அத்தனை பேரும், இன்னொருவனின் தொடையை கிள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். அப்படியொரு அசிங்கம்தான் இது.

ஸ்டைலிஷ் டைரக்டர் கவுதம் மேனன் அவ்வப்போது நடிக்கவும் செய்கிறார். அப்படிதான் அவரை ‘வால்டர்’ என்ற படத்தில் நடிக்க வைத்தார்கள். நாற்பது லட்சம் அட்வான்சை வாங்கிக் கொண்டு நடிக்க வந்தவர், ரெண்டு நாள் நடித்ததோடு சரி. ஷுட்டிங்குக்கு வந்து ‘மூட் சரியில்லை’ என்று கிளம்பிப் போனதே பத்து நாட்களுக்கும் மேல். லொக்கேஷன் சார்ஜ், ஷுட்டிங் செலவு என்று எக்கச்சக்க லாஸ் !

முதலைக்கு முதுகு தேய்ச்சு விடுவானேன்... விரலை கிழிச்சுப்பானேன்... என்று கடைசியாக ஒரு முடிவுக்கு வந்த வால்டர், கவுதமை கழட்டி விட்டுவிட்டு மிச்ச சொச்ச தூரத்தை நடக்க ஆரம்பித்திருக்கிறார்!

BLOG COMMENTS POWERED BY DISQUS