திரைச்செய்திகள்

தெய்வம் மோர் கொடுத்தாலும், தேவாங்கு சொம்பு கொடுக்காது போலிருக்கு. விஷால் அண் டீமுக்கு ஏற்பட்ட வில்லங்கம்தான் அப்படி! அதுவும் இங்கல்ல.

லண்டனில்! துப்பறிவாளன் 2 படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருக்கிறது டீம். அங்கிருக்கும் பெண் தொழிலதிபர்தான் இந்த படத்தின் பைனான்ஸ் பேங்கிங் என்கிறார்கள். விஷாலின் நெருங்கிய நண்பரும் நடிகருமான ஒருவர், நள்ளிரவு நேரத்தில் ஃபுல் பூஸ்டில் அந்த தொழிலதிபரின் ரூம் கதவை தட்டியதாக கூறப்படுகிறது.

விபரீதம் உணராமல் கதவை திறந்தவரை வேறு நோக்கத்தோடு அணுகினாராம் இவர். அவ்வளவுதான்.. காச் மூச் என்று கத்திய அந்த பெண்மணி, உடனே போலீசுக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். அந்த நாட்டு சட்டதிட்டங்கள் கடுமையாச்சே? கதறிவிட்டார்களாம் எல்லாரும்.

காலில் விழாத குறையாக இயக்குனரும் ஹீரோவும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். படம் தொடருமா, பாதியிலேயே நிறுத்தப்படுமா என்பதுதான் இப்போதைய திடீர் கேள்வி.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் கடந்த மாதம் சில தமிழ்சினிமா பிரபலங்கள் இணைந்தனர்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழ்நாட்டில் சைவ, அசைவ உணவங்களில் இன்று அளவு சாப்பாட்டின் சாராசரி விலை 60 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்கிறது.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனை நிறுத்திவிடலாமா என்று விஜய் தொலைக்காட்சியும் அந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமான என்.டி.மோலும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தொலைக்காட்சி வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன.

யூடியூப்பில் உலக பிரபலமாகி இருப்பது ராணி தாஜ் என்பவரின் பங்கார டோலக்கு வாசிக்கும் வீடியோதான்.