திரைச்செய்திகள்

இவரெல்லாம் ஹீரோவா, வில்லனா என்கிற டவுட்டை கிளப்பியிருக்கிறார் மிருகம் ஆதி. ஈரம், குற்றம் 23 போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய அறிவழகன், மீண்டும் அருண் விஜய் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறார்.

அதில்தான் கட்டையை போட்டு கதவை மூட முயல்கிறார் ஈரம் பட ஹீரோ ஆதி. ஏன்? அந்தப்படத்தின் வெற்றிக்குப்பின் ஐம்பதாயிரம் அட்வான்ஸ் கொடுத்திருந்தாராம் அறிவழகனுக்கு. அதற்கப்புறம் ஆள் எங்கு போனாரென்றே தெரியாத நிலையில் அருண்விஜய்யை கமிட் பண்ணிவிட்டார் இவர்.

‘நான் அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணி வச்சுருக்கேன். நீங்க எப்படி அருண்விஜய்ட்ட போவலாம்?’ என்பதுதான் ஆதியின் அட்ராசிடி! கடைசியா ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் அறிவழகன். உரிச்ச வெங்காயம் முளைக்காது, கரிச்ச உப்பு இனிக்காதுன்னு எப்படி சொல்வாரு இனிமேல?