திரைச்செய்திகள்

எந்தகாலத்திலும் மாற்றமில்லாதிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் மிகப்பெரிய ஆச்சரியம்தான் . சிறு குழந்தையாக அறிமுகமாகிய போதிலிருந்து இன்று வரை அவரைக் கவனித்து வருகின்றேன்.

அவரது பழகும் பண்பிலிருந்து அனைத்துச் செயல்களிலும் எந்த மாற்றமும் இல்லாது வாழ்கின்றார். இவ்வாறான மனிதரை இதவரை நான் கண்டதேயில்லை. இனிக் காண முடியுமா என்பதும் தெரியவில்லை. அவரால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள அந்த அற்புதம் காண்பதற்கு உங்களைப் போலவே நானும் ஆவலாக உள்ளேன்.

அவருடன் சிவா இயக்கும் புதிய படத்தில் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என சென்னை காமராஜர் அரங்கில் நடந்த ரஜினிகாந்த் பிறந்த நாள் விழாவில் பங்கேற்றுப் பேசிய நடிகை மீனா கூறினார்.