திரைச்செய்திகள்
Typography

வலிமை படத்தின் கதாநாயகி யார்? இதுதான் பரவலாக பேசப்படும் கேள்வியாக இருக்கிறது.

யாமி கவுதம் என்றார்கள். இப்போது பிரணதி சோப்ரா என்கிறார்கள். இரண்டையும் தேர்வு செய்தவர் போனிக்கபூர்தானாம். யாருக்கு அஜீத் டிக் அடிக்கப் போகிறாரோ? அதை விடுங்கள். பக்காவாக தயாராகாமல் படப்பிடிப்புக்கு போகப் போவதில்லை என்று உறுதியாக இருக்கிறார் ‘வலிமை’ இயக்குனர் எச்.வினோத். அஜீத்தும் தயார் நிலையில்தான் இருக்கிறார். இருந்தாலும் தயாரிப்பு வேலைகளில் தவிப்பு இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்த போனிக்கபூர், ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் போட்டுக் கொண்டிருக்கிறார். எடுத்த எடுப்பிலேயே பாடல் காட்சியா என்றால்  அதுதான் ஈஸி. படத்தின் இன்னபிற வேலைகள் முடிவதற்குள் டான்ஸ் மாஸ்டர் உதவியோடு இது தனியாக நடக்குமல்லவா?

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்