திரைச்செய்திகள்
Typography

ஜால்ரா அடித்து ஆளை கவிழ்ப்பதில் தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு நிகர் அவர்கள்தான்.

லைகா அதிபர் சுபாஷ்கரனுக்கு ஒரு பாராட்டு விழா சென்னையில் நடந்தது. கலந்து கொண்ட மணிரத்னம், ‘அவர் வாழ்க்கை கதையை கேட்டேன். அதுவே பரபரப்பான ஒரு ஸ்கிரின் ப்ளேவா இருக்கு. சந்தர்ப்பம் அமைஞ்சா அவர் வாழ்க்கை கதையை படமாக்குவேன்’ என்றார். அதே நிகழ்ச்சிக்கு சற்று லேட்டாக வந்த ஏ.ஆர்.முருகதாஸ், இதே வார்த்தைகளை சொல்ல... அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது. இவர்கள் இருவரும் சொல்வதைப்போல, இலங்கை போரின் போது ஒரு அகதியாக தப்பி லண்டனுக்கு ஓடியவர்தான் சுபாஷ்கரன். அந்த தப்பித்தல் நிகழ்வுதான் அவ்வளவு த்ரில்லர் மொமென்ட்! ஆனால் இதையே முதல் பாகம், இரண்டாம் பாகம் என்று எடுப்போம் என்று இவ்விரு இயக்குனர்களும் சூளுரைப்பதை பார்த்தால் 300 கோடி பட்ஜெட்டில் இரண்டு படங்கள் உருவாகும் போலிருக்கே?

BLOG COMMENTS POWERED BY DISQUS