திரைச்செய்திகள்
Typography

எனை நோக்கி பாயும் தோட்டா வந்துவிட்டால் அத்தனை கஷ்டமும் அவுட். மீண்டும் பசுமையான வாழ்க்கைக்கு உத்தரவாதம் என்று நினைத்த தயாரிப்பாளர் மதனுக்கு அப்படம் பப்படம் ஆனதால் பெருத்த கவலை.

இஷ்டப்பட்டு யாரும் நஷ்டப்படப் போவதில்லை. ஆனாலும், அந்த நஷ்டத்திற்கு சினிமா என்றால் இஷ்டமோ இஷ்டம்! வருகிற மெகா பட்ஜெட் படங்களெல்லாம் வந்த ரெண்டாம் நாளே வெறிச்சோடிப் போவதன் ரகசியம் புரியாமல் திக்குமுக்காடுகிறது சினிமா. இந்த ராகுகால நேரத்தில் அவரும்தான் என்ன செய்வார்?  எனை நோக்கி பாயும் தோட்டாவால் பல கோடிகள் நஷ்டம். ஆனால் ஐசரி கணேஷ் உதவியால் பெரும் கண்டத்திலிருந்து தப்பித்துவிட்டார் கவுதம் மேனன். இது ஒருபுறம் இருக்க, தன்னை பெரிய நிலைக்கு ஆளாக்கிய தயாரிப்பாளர் மதனுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிற சிவகார்த்திகேயன் மீண்டும் ஒரு படத்திற்கு கால்ஷீட் தருவதாக கூறியிருக்கிறாராம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS