திரைச்செய்திகள்
Typography

வந்தா மல... போனா கூழாங்கல் என்கிற அளவுக்கு சினிமாவில் முதலீடு செய்பவர்களின் நிலை போராட்டமாகிவிட்டது.

விட்ட குறையுமில்ல... தொட்ட குறையுமில்ல... சமுத்திரக்கனியை பொறுத்தவரை இது கெட்ட குறை! முதல் பிரதி அடிப்படையில் நாடோடிகள் 2 படத்தில் முதலீடு செய்தார்களாம் இவரும் சசிகுமாரும். சுமார் மூன்று கோடிவரை முதலீடு செய்தவர்களுக்கு ஏகப்பட்ட இழுபறி. தயாரிப்பாளர் நந்தகோபால் பணத்தையும் தராமல் படத்தையும் வெளியிடாமல் இழுத்தடிக்க... கட்ட கடைசியில் ‘60 லட்சம் கொடுத்தால் கூட போதும். படத்தை ரிலீஸ் பண்ணுங்க’ என்கிறாராம் சமுத்திரக்கனி. அதற்கப்புறமும் கல்லுளி மங்கன் போல நல்ல நல்ல ரிலீஸ் தேதிகளை மிஸ் பண்ணிக் கொண்டு வருகிறார் நந்தகோபால். ஏன்? இதே படத்தை வைத்து சுமார் 35 கோடிகள் கடன் வாங்கியிருக்கிறாராம். அவர்களும் தன் பங்குக்கு பாதியை விட்டுத்தரும் வரை படத்தை வெளியே விட மாட்டார் அல்லவா?

BLOG COMMENTS POWERED BY DISQUS