திரைச்செய்திகள்
Typography

காதல் கண்ணை மறைக்குதோ இல்லையோ? சமயங்களில் கண்ணை திறந்துவிடும். முன்னாள் காதலி ஹன்சிகாவுக்காக பதினைந்து நாள் கால்ஷீட் கொடுத்து ‘மஹா’ என்கிற படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் சிம்பு.

இந்தப்படத்தில் ஹன்சிகாதான் ஹீரோயின். சிம்பு ஒழுங்காக ஷுட்டிங் வருவதே பெரும்பாடு. இதில் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக படத்தை கிடப்பில் போட்டுவிட்டது தயாரிப்பு நிறுவனம். நடித்தது போக மிச்சமிருந்த நான்கு நாள் கால்ஷீட்டுக்கு இதோ அதோ என இழுபறியிலும் இழுபறி. இறுதியாக ஒரு தேதி கொடுத்திருக்கிறார் சிம்பு. ஜனவரி 18 ந் தேதிதான் அது. விமான நிலையத்தில் ஷுட்டிங்! எப்படியோ ஐதராபாத்தில் பர்மிஷன் கிடைத்து அங்கே வரச்சொல்லியிருக்கிறார்களாம். காத்திருக்கிறார் சிம்பு.

BLOG COMMENTS POWERED BY DISQUS