திரைச்செய்திகள்
Typography

மல்டி குரோர் பட்ஜெட்டாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன்.

அதிக முதலீடு. அதிக மொழிகளில் வெளியீடு என்கிற தத்துவத்தில் தயாராகி வரும் பொ.செ படப்பிடிப்பு துவங்கிவிட்டது. பிராணிகள் நல வாரியத்தின் பிசாசு முகத்திற்கு அஞ்சியே ஒரிஜனல் விலங்குகளை தேடுவதில்லை சினிமாக்காரர்கள்.

சர்டிபிகேட் வாங்குவதற்குள் நாய் கடி, பேய் கடியாகிவிடுகிறது நிலைமை. அதுவும் யானை குதிரைகள் எக்கச்சக்கமாக வருகிற சரித்திர படங்கள் என்றால்?

இருக்கவே இருக்கு கிராபிக்ஸ் என்று சமாதானமாகி விடுகிறார்கள் பலர். ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் வருகிற யானை குதிரைகள் தத்ரூபமாக இருக்க வேண்டுமென்று நினைத்திருக்கிறார் மணிரத்னம்.

ஒரிஜனல் விலங்குகளுக்காக ஷுட்டிங்கை தாய்லாந்துக்கு கொண்டு போனார். அங்கு பிராணிகள் நல வாரிய சர்டிபிகேட் கிடைப்பதில் லஞ்சமோ, இழுபறியோ இல்லை. இந்த செய்தியை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும் இந்த நேரம், எத்தனையெத்தனை யானைகளை ஷுட் பண்ணிக் கொண்டிருக்கிறாரோ மிஸ்டர் மணி!

BLOG COMMENTS POWERED BY DISQUS