திரைச்செய்திகள்

அரசியலில் கூட சினிமா இல்லாமல் போய்விடும்.

ஆனால் சினிமாக்காரர்களிடம் அரசியல் இல்லாமலிருக்காது. நடிகை ராதிகாவின் சாம்ராஜ்யத்தை சன் டி.வி யிலிருந்து அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது என்கிற நிலைமை, ஐயோ பாவம் அரசியலால் ஒழிந்தது. ஒரு காலத்தில் மட்டுமல்ல, அண்மைக்காலம் வரைக்கும் கூட, சன் தொலைக்காட்சியின் தரமிக்க படைப்புகளில் ஒன்றாக விளங்கியது ராடன் டி.வி யின் சீரியல்கள். யாரை விட்டுக் கொடுத்தாலும் கொடுப்போம். ராடன் விஷயத்தில் நோ காம்ப்ரமைஸ் என்றுதான் இருந்தது சன். ஆனால் காலம் எல்லாவற்றையும் மாற்றி உருட்டி விளையாடிக் கொண்டே இருக்கிறதல்லவா?

இப்போது ராதிகாவுக்கும் சன் டி.விக்குமான பந்தம், விரைவில் முடிவுக்கு வருவதாக கூறப்படுகிறது. ராதிகா இடத்தை நிரப்ப வேண்டும் என்றால், அதற்கு சரியான நபர் யார். எப்படி எப்படியோ யோசித்தவர்களுக்கு, லட்டு மாதிரி கையில் வந்து உட்கார்ந்தவர் குஷ்புதான். விதவிதமான நிகழ்ச்சிகளால் சன்னுக்கு துணை நிற்க சபதம் போட்டுவிட்டாராம் குஷ்பு.

அவரது முதல் டச்சே அமர்க்களம். கல்யாணம் ஆன நாளில் இருந்தே, சீரியலுக்கு வந்துருங்க என்று சினேகாவை நச்சரித்து வந்த சினிமாக்காரர்களுக்கு, நோ நோ என்று கூறிவந்த சினேகா, குஷ்பு அழைத்ததும் “சரிக்கா…” என்று கூறிவிட்டாராம். விரைவில் இந்த அறிவிப்பு முறைப்படி வரலாம்.

இதற்கிடையில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார் அல்லவா? அதிலும் ஒரு முக்கியமான ரோல் சினேகாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்தப்படம் திரைக்கு வருவதற்குள், சினேகா சின்னத்திரையில் எத்தனை எபிசோட்டுகளை தாண்டியிருப்பாரோ?

கொரோனா ஊரடங்கில் ஆடை வடிவமைப்பாளர் சத்யாவுடன் சசிகுமார் ஜூம் நேரலைக் கலந்துரையாடலில் கலந்து கொண்டார். அப்போது சசிகுமாரிடம் சில பிரபலங்கள் கேள்வி எழுப்பினார்கள். அப்போது பாக்யராஜின் மகனும் நடிருமான சாந்தனு உருப்படியான கேள்வி ஒன்றைக் கேட்டார். அது என்ன? கேள்வியையும் பதிலையும் தொடர்ந்து வாசியுங்கள்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

ஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.