திரைச்செய்திகள்
Typography

ஒரு கதை இன்னும் எத்தனை படிகளில் ஏறி இறங்குமோ, அந்த சீமானுக்கே வெளிச்சம். விஜய்காக எழுதிய ‘பகலவன்’ கதையை விதார்த் கிடைத்தால் கூட எடுத்துவிடுவார் போலிருக்கிறது சீமான்.

ஆனாலும், சம்பவம் சபையேறினால்தானே? இந்த நேரத்தில்தான், ‘அண்ணே... நான் ரெடி’ என்று ஆன் தி ஸ்பாட் வாக்குறுதி கொடுத்தார் சிம்பு. வெங்காயமே முன் வந்து விலையை குறைத்துக் கொண்ட மாதிரி சிம்புவே முன் வந்து அழைத்தாலும் தயாரிப்பாளர் கிடைக்கணுமே?

சமீபத்தில் ஹீரோ பட தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷை சந்தித்த சீமான், ‘சிம்பு ரெடி... நீங்க ரெடியா? சுட சுட ஒரு வெடி போடலாம்’ என்று கேட்க, அவரும் அரை ஷட்டரை ஓப்பன் பண்ணியிருக்கிறாராம். மீதி ஓப்பனுக்கு சிம்புவின் செயல்பாடுகள்தான் கை கொடுக்கணும் !

BLOG COMMENTS POWERED BY DISQUS