திரைச்செய்திகள்
Typography

ராகு காலம், எமகண்டம் குறித்தெல்லாம் கலங்குகிறவரல்ல கமல்ஹாசன். ஆனால் அவர் நடித்துக் கொண்டிருக்கும் சமீபத்திய படங்களின் கதி ? அதையெல்லாம் நம்ப வைக்கும் போலிருக்கிறது.

நடுவில் பலமுறை ஒத்தி வைக்கப்பட்ட ஒரு வழியாக துவங்கி நடந்து வருகிறது. நடுவில் கமல் விட்ட லீவு பாதி, உடல் நலக் குறைவால் ஏற்பட்ட லீவு மீதி என்று அப்படத்தின் கதி அதோ கதி ரன்னிங்தான்.

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் அடுத்த ஷெட்யூல் ஜனவரி 10 ந் தேதி துவங்கிவிட்டது. காலில் இருந்த பிளேட்டை அகற்றிய கமல், ஓய்வெடுக்க வெளிநாடு சென்றிருக்கிறார். அவர் மீண்டும் பிப்ரவரியில்தான் ஷுட்டிங்கில் கலந்து கொள்ளப் போகிறாராம்.

ஆமா... இந்தியன் 2 எப்போ ரிலீஸ்? அந்தப்படத்தில் கமல் ஏற்றிருக்கிற கேரக்டரும் அவரது நடிப்பும் லட்சோப லட்சம் வாக்குகளை வாரித்தருகிற அளவுக்கு இருப்பதால், 2021 தேர்தல் நேரத்தில் வரட்டும் என்று நினைக்கிறாராம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS