திரைச்செய்திகள்
Typography

குருவி தலையில் குண்டானை கவிழ்த்துவிட்டார்களோ என்கிற அளவுக்கு டவுட் கிளம்பிவிட்டது. வேறென்ன? இதுதான் விஷயம்... கம்பு சுத்துறேன்னு கண்ணை குத்திக்கிறதுல டிஆருக்கு நிகர் அவரேதான்!

திமுக எம்.எல்.ஏ வாக இருந்தபோது சொந்த கட்சியை பற்றியே விமர்சனம் செய்து வீட்டுக்கு அனுப்பப்பட்டவராச்சே? இப்போதும் அதே வாய் அதே லொட லொடப்பு. இன்னும் அவர் அதிலிருந்து விடுபடவில்லை என்பதுதான் ஷாக்.

விநியோகஸ்தர் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டி.ஆர், முதல் பிரஸ்மீட்டிலேயே சொந்த வீட்டில் சுண்ணாம்பை சுரண்டியதுதான் கொடுமை! ‘தியேட்டர்ல டிக்கெட் விலை கன்னாபின்னான்னு இருக்கு.

பாப்கார்ன் விலை பகீர்னு இருக்கு’ என்றெல்லாம் கூறி தன் பின்னாலிருக்கிற கூட்டத்தை பதைபதைக்க விட்டிருக்கிறார். தியேட்டர்ல அதிக டிக்கெட் விற்றால்தானே விநியோகஸ்தருக்கு அதிக ஷேர் வரும்? இவரு என்னப்பா சேம் சைட் கோல் அடிக்கிறார் என்று கதற ஆரம்பித்திருக்கிறார்கள்!

BLOG COMMENTS POWERED BY DISQUS