திரைச்செய்திகள்
Typography

சின்ன படத் தயாரிப்பாளர்கள்தான் இப்படியொரு பம்மாத்து பண்ணுவார்கள். அதாவது அந்த ஏரியா விற்றுவிட்டது. இந்த ஏரியா விற்றுவிட்டது என்று ஏரியா வாரியாக விநியோகஸ்தர் பெயரை வெளியிடுவார்கள்.

ஆனால் இந்த பெரிய படத்துக்குமா இந்த பந்தா என்று கேட்கிற அளவுக்கு சமீபத்தில் ஒரு அலட்டல். ‘மாஸ்டர்’ படத்தின் வியாபார வேலைகளை ஆரம்பித்துவிட்டது கம்பெனி. எல்லா ஏரியாவும் சோல்ட் அவுட் என்று சொல்கிற விதத்தில் ஒரு வீடியோ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

விஜய்யின் நெருங்கிய உறவினர் பிரிட்டோதான் இப்படத்தின் தயாரிப்பாளர் என்றாலும், கண்ட்ரோல் முழுக்க லலித் என்கிற இணைத் தயாரிப்பாளர் கையில்தான். இந்தப்படத்தில் காட்டுகிற பர்மாமென்ஸ்சை பார்த்துவிட்டு நேரடியாக விஜய்யே தனக்கு கால்ஷீட் தர வேண்டும் என்கிற அளவுக்கு மெனக்கெடுகிறாராம் லலித்!

மற்ற ஏரியாக்களை விடுங்கள். இப்படத்தின் எப்.எம்.எஸ் என்று சொல்லக்கூடிய வெளிநாட்டு வியாபாரம் இதுவரை விற்கப்பட்ட தொகையை விட சில கோடிகள் அதிகம் என்கிறார்கள்!

BLOG COMMENTS POWERED BY DISQUS