திரைச்செய்திகள்

சினேகா முழு மூச்சாக நடிக்கும் போதெல்லாம் அவரை ரசிக்காமல் விட்ட தயாரிப்பாளர்கள் பலர், இப்போ அக்கா, அண்ணி கேரக்டர் இருக்கு.

வர்றீங்களா என்றால் என்ன வரும்? யெஸ்... கோபம் வந்ததாம் சினேகாவுக்கு. அதுவே தனி ஒருவன் படப்புகழ் ராஜா அழைத்தால் வருமா? சைலன்ட்டாக யெஸ் சொன்னவர், “நான் கன்வின்ஸ் ஆகுற மாதிரி கேரக்டர் இருக்கணும்” என்றாராம். சொல்லி வைத்த மாதிரியே சினேகாவை அசர வைத்துவிட்டார் ராஜா. அவர் ஹீரோயினாக நடித்தால் எவ்வளவு வாங்குவாரோ, அதே அளவுக்கான பேமென்ட் வழங்கப்பட்டதாம். இப்படத்தை தயாரிப்பது, சிவகார்த்திகேயனின் நிழல், ஆர்.டி.ராஜா. வித்தியாசமா யோசிக்கிறாங்க, விவகாரமா ஜெயிக்கிறாங்கப்பா...