திரைச்செய்திகள்
Typography

அனிருத்துக்கு ரெட் என்று இசைக்கலைஞர்கள் சங்கம் மிரட்டிய போதும் அது குறித்து கவலைப்படுவதாக இல்லை அவர். இருந்தாலும் அனிருத் செய்தது சரியில்லை என்று பிடிவாதமாக நின்று பட்டிமன்றம் நடத்துகிறது கோடம்பாக்கம்.

சாகா வரம் பெற்ற அற்புதமான பாடல்களை கொடுத்த தமிழக இசைக்கலைஞர்களுக்கு இப்படியொரு சோதனையா? இங்கிருக்கும் பின்னணி இசைக்கலைஞர்களை பயன்படுத்தாமல் வெளிநாட்டிலிருந்து வரவழைத்து பயன்படுத்தி வருகிறாராம் அனிருத்.

‘தர்பார்’ படத்தின் பின்னணி இசை கோர்ப்பு வேலை நடந்து வரும் நேரத்தில் பலமுறை வலியுறுத்தியும் இசைக்கலைஞர்கள் சங்கத்தின் பேச்சை மதிக்கவே இல்லையாம் அவர். இளையராஜாவும் ஏ.ஆர்.ரகுமானுமே சங்க விதிகளை பின்பற்றும் போது, இந்த வெட்டுக்கிளி வந்து குட்டிப்புலி போல சீறுகிறதே என்றும் கவலைப்படுகிறார்கள் இசைக்கலைஞர்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS