திரைச்செய்திகள்
Typography

நடிகர் தனுஷ் அடுத்து இயக்குனர் அவதாரம் எடுகிறார். ராஜ்கிரணை வைத்து 'பவர் பாண்டி' என்ற படத்தை அவர்  இயக்க உள்ளார். 

இதுவரை ஒரு நடிகராக, பாடகராக, கவிஞராக, தயாரிப்பாளராக பல முகங்கள் காட்டி முத்திரை பதித்துவரும் தனுஷ், இயக்குநராக அறிமுகமாக உள்ளார். அதன் அறிவிப்பை இன்று அவர் வெளியிட்டார்.

தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக  நடிக்கும் இந்தப் படத்துக்கு‘பவர் பாண்டி' என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரசன்னாவும் இதில் நடிக்கிறார். ஜோக்கர் படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இப்படத்துக்கு இசையமைக்கிறார். தனுஷ் தனது வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். பவர் பாண்டியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகியுள்ளது.

 இனிமேல்தான் படத்தின் கதை மற்றும் படத்த்தில் நடக்க உள்ள மற்ற நடிகர்கள் குறித்து விவரங்கள் தெரிய வரும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்