திரைச்செய்திகள்
Typography

எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் போன்ற முன்னணி ஆக்டர்கள் முயன்ற விஷயம்தான் இது. பொன்னியின் செல்வன் கதையை திரை வடிவம் ஆக்குவது திருவாரூர் தேரை, திருவல்லிக்கேணி சந்துக்குள் இழுத்து வருவதற்கு சமம். அப்படியிருந்தும் தேரை இழுக்க துணிந்துவிட்டார் மணிரத்னம்.

முதல் ஷெட்யூலை முடிப்பதற்குள் நாக்கு தள்ளிவிட்டதாம். தனது வேலையை தலையில் சுமந்து முடிக்கிற அளவுக்கு சரியான உதவி இயக்குனர்கள் இருந்தால்தான் தேர் நகரும் என்ற முடிவுக்கு வந்தவர், தன்னிடம் பணியாற்றிய முன்னாள் உதவி இயக்குனர்களை அழைத்தாராம். அதுவும் நல்ல சினிமா எடுத்து நல்ல பெயர் வாங்கிய சுசிகணேசன், அழகம் பெருமாள் ஆகிய இருவரையும்.

குரு அழைத்தால் சரி சொல்வதுதானே சிஷ்யர்களுக்கு அழகு? செகன்ட் ஷெட்யூலில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்