திரைச்செய்திகள்
Typography

இது டகால்டி கதையல்ல. டகால்டி படத்தில் நடித்த நல்ல மனுஷனின் கதை. வளர்ந்த கதையை மறந்துவிட்டு பிறந்த கதைக்கே திரைக்கதை எழுதுகிற கோயபல்ஸ்கள் குடியிருக்கிற கோடம்பாக்கத்தில் இப்படியும் ஒரு மனுஷனா என்று வியக்கிறார்கள் சந்தானத்தை பார்த்து.

இவரும் இயக்குனர் ராஜேஷ் எம் மும் இணைந்து கொடுத்த ஒரு கல் ஒரு கண்ணாடி, சிவா மனசுல சக்தி போன்ற படங்கள் சந்தானத்தின் கேரியரில் பெஸ்ட். அப்படிப்பட்ட இயக்குனருக்கு அடுத்தடுத்து அடி. கடைசியாக வந்த மிஸ்டர் லோக்கல் படமும் இவரை வாரிவிட, பெரும் சோகத்திற்கு ஆளாகிவிட்டார் ராஜேஷ்.

இந்த நேரத்தில் போனில் என்ட்ரி கொடுத்த சந்தானம், உங்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கேன். நீங்க கவலைப்படுவது எனக்கு சங்கடமா இருக்கு. என் பேனர்லேயே நீங்க படம் இயக்கலாம். கால்ஷீட் ரெடி என்றாராம். எஸ்.எம்.எஸ் சை மிஞ்சுகிற காமெடியுடன் ஒரு ஸ்கிரின் ப்ளேயை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ராஜேஷ்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்