திரைச்செய்திகள்
Typography

தர்பார் படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் படுதோல்வி அடைந்துவிட்டது. இந்த தோல்வியை கண்டு கோலிவுட் வட்டாரங்கள் மரண பீதி அடைந்திருக்கின்றன. இது மட்டுமல்ல, தமிழகத்தில் சில உள்ளூர் கேபில் டிவிக்களில் ஒளிபரப்பப்படுவதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பலர் ஆதாரத்துடன் பதிவிட்டனர். போதாதற்கு இதே படம் பரவலாக வாட்ஸ் அப்பிலும் பரப்பப்பட்டது.

ஆனாலும் இது அக்கிரமம். பைரசி உச்சத்தில் உள்ளது. பெரும்செலவு செய்து எடுக்கப்பட்ட தர்பார் படம் கேபிள் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று லைகா பட நிறுவனம் தரப்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையிலே இந்த படம் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பலருக்கு. பிடிக்கவில்லை. டப்பிங் படம் பார்ப்பது போல் உள்ளது என்று அவர்களே வருத்தப்பட்டார்கள். அதனால் விநியோகஸ்தர்கள் எப்போது வேண்டுமானாலும் கொடி பிடிப்பார்கள் என்று சொல்லபட்டது.

தனியாக படம் வெளியானதற்கே இப்படி என்றால் போன முறைபோல கடும் போட்டிக்கு நடுவில் வந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று விநியோகஸ்தர்கள் மாற்றி மாற்றி பேட்டி அளித்து கொண்டிருக்கையில், ஆந்திராவுக்கு ஓடிய இயக்குநர் முருகதாஸ் இந்த விநியோகஸ்தர்களிடமிருந்து பாதுகாப்பு கேட்டு போலீசிடம் புகார் கொடுத்து விட்டார்.

வெயிட்டாக கவனிக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளும் விநியோகஸ்தர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விட்டார்கள். ஆக.. படத்தை விற்க மட்டும் விநியோகஸ்தர்களை தேடி செல்லும் முருகதாஸ் தற்போது அவர்கள் மீதே புகார் கொடுத்தது கோலிவுட்டில் பெரிய பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது என்கிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS