திரைச்செய்திகள்
Typography

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் நயன்தாரா நடித்த முதல் படம் ‘நானும் ரவுடிதான்’. அந்தப் படத்தில் ஏற்பட்ட நட்பே பின் காதலாகி, லிவிங் டுகெதர் ஆகி தற்போது பதிவுத் திருமணம் செய்துகொண்டு கணவன் மனைவியாக வாழ்த்துகொண்டிருக்கிறார்கள்.

‘நானும் ரவுடிதான்’ படத்தைத் தொடர்ந்து தற்போது மீண்டும் விஜய்சேதுபதியை இயக்குகிறார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன் தாராவும் சமந்தாவும் நடிக்கிறார்கள். சமந்தா நயன் தாராவுடன் இணைவது இதுவே முதல் முறை. இந்தப் படத்துக்கு ‘காற்று வாக்கில் காதல்’ என்று தலைப்பு வைத்திருக்கிறாராம் விக்னேஷ் சிவன்.

இது ஒருபக்கம் இருக்க விக்னேஷ் சிவன் - நயந்தாரா ஆகிய இருவரது தயாரிப்பு நிறுவனமான ரௌடி பிக்சர்ஸில் நயன் தாரா பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். அவள் படத்தை இயக்கிய இந்தி இயக்குநர் மிலிந்த் ராவ்தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதற்கு நெற்றிக்கண் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். கண் பார்வையற்ற நயன்தாராவுக்கு துணையாக இருக்கிறது ஒரு நாய். கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘பிளைண்டு’ என்ற தென்கொரியப் படத்தின் ரீமேக் தான் இந்த நெற்றின்கண் படமாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS