திரைச்செய்திகள்
Typography

தென்கொரிய சினிமா, ஹாலிவுட் சினிமா, இத்தாலி சினிமா இந்த மூன்று சினிமா உலகங்களில் இரண்டு விதமான படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒன்று உலக சினிமா, மற்றொன்று மசாலா கலந்த மெயின் ஸ்ட்ரீம் சினிமா.

இம்மூன்று மெயின் ஸ்ட்ரீம் சினிமாக்களில் வெளியாகும் படங்கள் உலகின் பல நாட்டு சினிமாக்களிலும் காப்பி அடிக்கப்படுவது தொடர்ந்து நடந்தேறும். தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. ஒரே கதையுடன் அவ்வப்போது வெளியாகும் படங்களே இந்தக் குட்டை நமக்கு உடைத்துக் காட்டும்.

கோலிவுட்டில் தற்போது இரண்டு படங்கள், ‘ஆல் எபவுட் மை ஒய்ஃப்’ என்ற தென்கொரிய நகைச்சுவை காதல் படத்தை காப்பி அடித்து உருவாகியிருக்கின்றன என்று இந்த இரண்டு படங்களின் திரைக்கதையிலும் வேலை செய்திருக்கும் கோஸ்ட் திரைக்கதை எழுத்தாளர்கள் நம்மிடம் செய்தியைக் கசியவிட்டிருக்கிறார்கள்.

காப்பி அடிக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களில் ஒன்று கயல் ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள‘டைட்டானிக் – காதலும் கவுந்து போகும்’ என்ற படம். சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படத்தை இப்படத்தை ஜானகிராமன் அறிமுக இயக்குநர் இயக்கினார்.

அந்த இரண்டாவது படம் ‘ஓ மை கடவுளே’. அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடித்திருக்கும் படம். இதை இயக்கி இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார் அஷ்வந்த் மாரிமுத்து. இவர் நாளை இயக்குநர் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்