திரைச்செய்திகள்
Typography

ஷங்கர் ரஜினி காம்பினேஷனில் உருவாகும் 2,0 படத்தின் படப்பிடிப்பு இப்போது சாலிகிராமம் பகுதியில் அமைந்திருக்கும் பிரசாத் லேப் வளாகத்தில் நடந்து வருகிறது. பொதுவாக இதுபோன்ற சிறிய இடங்களில் பைட் காட்சிகளை எடுக்க மாட்டார்கள்.

ஆனால் வெளியே அவுட்டோரில் எடுத்தால், அல்லு சில்லு கழன்று விடும் என்று ரசிகர் கூட்டத்திற்கு அஞ்சிய ஷங்கர் இதற்குள்ளேயே எடுக்க ஆரம்பித்துவிட்டார். சில தினங்களுக்கு முன், லேப் வளாகத்தில் பாம் வெடிக்கும்படி ஒரு பைட் காட்சி. ஒரே புகை மயம். காதை பிளக்கிற அளவுக்கு சப்தம் வேறு.

சாலிகிராமம்வாசிகள் என்னவோ ஏதோ என்று கதிகலங்கிப் போய் விட்டார்கள். வழக்கம் போல, மனித அச்சங்களை மலிவு விலை சரக்காக குடித்து சந்தோஷமாக அன்றைய தின படப்பிடிப்பை முடித்தார் பிரமாண்ட இயக்குனர். வரவர திரைக்கு வெளியேவும் மிரட்றாய்ங்கப்பா... 

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்