திரைச்செய்திகள்
Typography

தென்னிந்திய சினிமாவை மட்டுமல்ல, வட இந்திய சினிமா, சீனாவிலும் மில்லியன்களை அள்ளிய படம் பாகுபலி, இரண்டு பாகங்களுக்குமே ரசிகர்கள் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தனர்.

அந்தப் படங்களைத் தொடர்ந்து ராஜமௌலி இயக்கி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட், அஜய்தேவ்கன், சமுத்திரக்கனி, ஹாலிவுட் நடிகை எட்கர் ஜோன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கின்றனர். ஒரு விபத்தின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு, அதாவது 2021 ஜனவரி மாதம் 8-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொழிகளைக் கடந்த இயக்குநர் ராஜமௌலியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதைக் கொண்டாடி வருகின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS