திரைச்செய்திகள்
Typography

சிவாஜிக்குப் பிறகு அவரது குடும்பத்தில் பிரபுவால் மட்டுமே வெற்றிகரமான நடிகராக முடிந்தது. பிரபுவின் அண்ணன் ராம்குமார் நடிக்க முயன்றும் வேலைக்கு ஆகவில்லை. இப்படிப்பட்ட நிலையில் ராம்குமாரின் மகன் துஷ்யந், அவரது மற்றொரு மகன் ஆகியோர் நடிக்க வந்து கிளிக் ஆகாமல் தயாரிப்பு வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர்.

ஆனால் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு, கும்கி படத்தின் மூலம் அறிமுகமாகி, பின்னர் ‘இவன் வேற மாதிரி’ ஆகிய இரண்டு படங்களைத் தவிர அவற்றுக்குப் பின்னர் அவர் நடித்த சுமார் 10 படங்கள் சுமார் என்று கூட சொல்லமுடியாமல் படுதோல்வி அடைந்தன. இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது அவர் நடித்த மல்டி ஸ்டாரர் படமான வானம் கொட்டட்டும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதனால் விக்ரம் பிரபுவின் தலை தப்பித்ததுடன் அவரை வைத்து படம் இயக்க சுசீந்திரன் முன் வந்திருக்கிறார். தவிர மணிரத்னம் தற்போது இயக்கிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஒரு வேடம் கொடுத்துள்ளார்.

இதற்கிடையில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ல ‘அசுர குரு’ படத்தை யாரும் வாங்க வராத நிலையில் தற்போது அதைக் கேட்டு விநியோகஸ்தர்கள் வர ஆரம்பித்துவிட்டார்களாம்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்