திரைச்செய்திகள்
Typography

கோடி கோடியாக பணம் இருப்பதாக சொல்லப்பட்டாலும், உரலுக்குள் தலையை விட்ட கதையாக டென்ஷனில் இருக்கிறது லைகா நிறுவனம். எல்லாம் கோடம்பாக்கம் தந்த குமட்டல், வாந்திதான்.

ஏப்ரலுக்குள் படத்தை முடிச்சுக் கொடுங்க. அதுக்கு மேல போனா வட்டி குட்டி போடும். குட்டி வட்டி போடும். ஏற்கனவே பல கோடி நஷ்டத்தில் இயங்குது கம்பெனி என்று நெருக்க ஆரம்பித்திருக்கிறார்களாம் டைரக்டர் ஷங்கரை. இதன்காரணமாக இந்தியன் 2 படப்பிடிப்பு தளம் எக்கச்சக்க டென்ஷனில் இருக்கிறது. இருந்தாலும் ‘நீங்க சொல்ற மாதிரி ஏப்ரலில் படம் முடியாது. ரொம்ப நசுக்குனா அப்பளம் தூள் ஆகிரும். பார்த்துக்கோங்க’ என்று கூறிவிட்டாராம் ஷங்கர்.

நடுவில் இன்னொரு பிரச்சனை வேறு. தர்பார் நஷ்டத்திற்காக விநியோகஸ்தர்களை தன் வீடு வரைக்கும் வர வச்சுட்டாங்களே என்கிற கோபத்திலும் இருக்கிறாராம் ரஜினி. இந்த கோபம், படமெடுத்த லைகா மீதுதான்!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்