திரைச்செய்திகள்
Typography

மான ரோஷம் பார்த்தா வாழ முடியாதுப்பா என்பார் சிங்கமுத்து.

படங்களில் டயலாக்காக சொன்னாலும் நிஜம் அதுதான் என்று நிரூபிக்கிறது இந்த சம்பவம். தர்பார் படப்பிடிப்பின் கடைசி நாளன்று, ‘சம்பள பாக்கியை இப்போதே வைத்தால்தான் கேரவேனை விட்டு கீழே இறங்குவேன்’ என்று கூறிய நயன்தாரா மீது, கடும்கோபத்திலிருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ்.

ரஜினியே சில மணி நேரங்கள் நயனுக்காக காத்திருக்கவும் நேரிட்டது. லேசாக முகம் சுளித்த ரஜினி, எப்படியோ சமாளித்தபடி மீண்டும் நயனுடன் நடித்தது கல்வெட்டு சமாச்சாரம்.

கட்... இதே நயன்தாராவை ரஜினியின் 168 வது படத்திலும் நடிக்க கொண்டு வந்திருக்கிறார் சிறுத்தை சிவா. நயன் கமிட்டான விஷயத்தை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா ஆன் போர்டு என்ற வாசகத்துடன் ட்விட்டரில் அறிவித்தது கம்பெனி.

இதுவரை தான் நடிக்கும் எந்த படத்தின் டைட்டில் கார்டிலும், லேடி சூப்பர் ஸ்டார் என்று போட்டுக் கொள்ளாத நயன்தாராவுக்கு இந்தப்படத்தின் டைட்டிலில் அந்த கிரடிட்டை கொடுப்பார்கள் போலிருக்கிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS