திரைச்செய்திகள்
Typography

காமெடி நடிகர் பட்டியலில் இருந்து விடுபட்டாலும் ஆச்சர்யமில்லை.

சூரியை ஹீரோவாக்கி வெற்றிமாறன் இயக்குகிற புதிய படம் அடுத்த மாதத்தில் துவங்குகிறது. முழு படப்பிடிப்பும் துபாய் மற்றும் சவுதி அரேபியாவில் நடக்கிறதாம். இதற்காக அந்த நாட்டுக்கு கிளம்பும் படக்குழு சுமார் இரண்டு மாதங்கள் அங்கேயே டேரா போடப்போகிறது. நடுவில் இரண்டு படங்களில்  நடித்து முடிக்க வேண்டிய சூரி, அடுத்தடுத்த ஊர்களில் படப்பிடிப்பை வைக்க சொல்லி சமாளித்து வருகிறார்.

பகலில் ஒரு படத்திலும் இரவில் இன்னொரு படத்திலுமாக அல்லாடுகிறார் மனுஷன். அதிருக்கட்டும்... வெற்றிமாறன்  பாலைவன தேசத்தில் போய் எடுக்கிற அளவுக்கு அப்படியென்ன கதை வைத்திருக்கிறார் அதில்? இங்கிருந்து வெளிநாட்டுக்கு போய் வாடும் இளைஞர்களின் உணர்வை அப்படியே வெளிப்படுத்துகிற உணர்ச்சி காவியம்தானாம் இது. சூரியை வச்சு காமெடி படத்தை எடுப்பாங்கன்னு பார்த்தா, கண்ணுல ஜலம் வச்சுருவாங்க போலிருக்கே?

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்