திரைச்செய்திகள்

நடிகர் கணேஷ் வெங்கட்ராம், பாலிவுட்டில் அறிமுகமாகும் "கன்ஸ் ஆஃப் பனாரஸ்" படத்தின் ட்ரெய்லரை மும்பையில் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் அறிமுகப்படுத்தினார் "கன்ஸ் ஆஃப் பனாரஸ்" படத்தின் விக்ரம் சிங் என்ற வில்லனாக நடிக்கும் கணேஷ் இப்படத்தின் ஒரு வலிமை மிகுந்த தாதாவாக நடித்திருப்பதாகவும் அதற்காக அந்த கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

என் இள வயது முதலே என்னுள் ஈர்ப்பை உண்டாக்கிய மாதுரி தீட்சித் எனது முதல் ஹிந்தி படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டதை விட எனக்கு வேறு என்ன பெரிய வாலண்டைன்ஸ் டே பரிசு கொடுத்திருக்க முடியும் என்று வெட்கத்துடன் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் கூறினார்.

ட்ரெய்லரில் உள்ள உண்மையான அதிரடி சாகசங்களை நடிகை மாதுரி தீட்சித் பாராட்டியதோடு, கதாநாயகனாக நடிக்கும் கரண் நாத் மற்றும் கணேஷின் கதாபாத்திரமறிந்து நடித்திருக்கும் யுக்தியை பாராட்டினார். 'கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸெய்பூர்' படத்தின் பணியாற்றிய சண்டை பயிற்சியாளர் ஷியாம் கவுஷல் கரண் நாத் மற்றும் கணேஷின் கதாபாத்திரங்களுக்காக அவர்கள் அளித்த முழு ஈடுபாட்டையும் பாராட்டினார்

"கன்ஸ் ஆஃப் பனாரஸ்" படத்தில் நத்தாலியா கவுர், மறைந்த திரு வினோத் கன்னா, அபிமன்யு சிங், ஷில்பா ஷிரோட்கர் மற்றும் மோகன் அகாஷே ஆகியோர் நடித்துள்ளனர். ஷைன்னா நாத் தயாரிப்பில் சேகர் சூரி இயக்கியிருக்கும் "கன்ஸ் ஆஃப் பனாரஸ்" பிப்ரவரி 28 வெளியாகவுள்ளது.

கணேஷ் வெங்கட்ராம் தற்போது நடிகர்-இயக்குனர் யூகி சேது இயக்கும் புதிய தமிழ் படத்தில் நடித்து வருகிறார். "நாங்கள் 80 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டோம், மார்ச் மாதத்தில் முழு படப்பிடிப்பும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். இது ஒரு வித்தியாசமான த்ரில்லர் படமாக உருவாகிறது. பெரும்பாலும் லண்டனில் படமாக்கப்பட்ட இப்படம் அனைவரையும் திகிலின் உச்சிக்கே இட்டுசெல்லும்” என்று கூறினார்.

மேலும் “தாடி” எனும் தெலுங்கு படத்தில் நடித்து வரும் கணேஷ் வெங்கட்ராம் அப்படத்தை பற்றி கூறுகையில் ”கமர்சியலாக உருவாகும் இப்படத்தில் நான் ஒரு நடிகராக நடிக்கிறேன். பத்திரிகையாளராக ஸ்ரீகாந்த் நடிக்கிறார். இரண்டு வெவ்வேறு பின்னணிகளை கொண்ட இருவர் ஒன்றினைந்து சமூக பிரச்சினையை தீர்க்க எடுக்கப்படும் முயற்சிகளே இப்படத்தின் கதைக்களம்" என்று கூறினார்.

 

எமதுபார்வை

தமிழகத்தின் தலைப்புச் செய்திகள்

கோடம்பாக்கம் கோனர்

பாரதிராஜா நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கியதால் கடுப்பான தயாரிப்பாளர் கவுண்ஸிலைச் சேர்ந்த பலரது எதிர்பார்ப்பு சினிமா தொழிலாளர்கள் சங்கமான பெப்சி உடைய வேண்டும் என்பது. அதை எடுத்துக்காட்டுவதுபோல ஒரு தயாரிப்பாளின் பதிவு அமைந்துள்ளது. அவர் தனது பதிவில்:

லொகார்னோ திரைப்பட விழாவில் குறுந்திரைப்படங்களுக்கான போட்டியில், சர்வதேச போட்டிப் பிரிவில் போட்டியிடும் திரைப்படம் "1978" இல் பாகிஸ்தான்.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

நாம் தனிமையில் இல்லை...' (We are Not Alone!)  4 தமிழ்மீடியாவின் புதிய அறிவியல் தொடர். எமது பிரபஞ்சம் மிகவும் ரம்மியமானது.

கோலிவுட் டோலிவுட் மல்லூவுட் சாண்டல்வுட் என தென்னிந்திய திரையுலகில் முக்கிய நாயகியாக வலம்வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.