திரைச்செய்திகள்
Typography

காதல், படிப்பு, கனவு எல்லாம் கலந்து குழப்பும் வயது கல்லூரிக் காலம். நல்ல கல்வி கற்று நல்ல வாழ்க்கை அமைத்துக் கொள்ளும் கனவு ஒருபுறமும், விரும்பியவனை அடையும் காதல் ஒருபுறமும், இருவேறு திசைகளில் இருக்கும் பருவத்தில் இருப்பவள் தான் கமலி.

அவள் இந்த இரண்டையும் அவள் அடைந்தாளா என்பதுதான் 'கமலி from நடுக்காவேரி' படமாம். ஐ.ஐ.டி. பின்னணியில் சொல்லப்பட்ட ஹைடெக் காதல் கதை என்கிறார் கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருக்கும் ராஜசேகர் துரைசாமி.

புதுமுகங்களை நம்பி ஒரு புதுமுக இயக்குநர் மக்களின் நல்ல ரசனையை நம்பி எடுத்திருக்கும் படம். கவிதையாக ஒரு காதல்.. தரமான ஒளிப்பதிவு, தெளிவான திரைக்கதை புதுமையான வசனங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறாரான் இயக்குநர் ராஜசேகர்.

ஆனந்தியின் நடிப்பு படம் வந்தபிறகு எல்லோராலும் பாராட்டப்படும். பின்னணி இசையும் பாடல்களும் திரைக்கதைக்கு உதவும் விதத்தில் அழகாக அமைத்திருக்கிறாராம் இசையமைப்பாளர். இ

தன் படபிடிப்பு முடிவடைந்ததும், கதையை கேள்விப்பட்டதும் உலக உரிமையை மாஸ்டர்பீஸ் என்கிற கம்பெனி வாங்கிவிட்டதாம் இதில் கமலி என்ற கனமான கதாபாத்திரத்தில் ‘கயல்’ ஆனந்தி நடித்திருக்கிறார். அவருக்கு விருது பெற்றுத்தரும் படமாக இது இருக்கும் என்கிறார்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்