திரைச்செய்திகள்
Typography

மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழா தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அரசியல் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அவரது தொடக்கப் பேச்சை உங்களுக்குத் தருகிறோம்.

“என் நெஞ்சில் குடியிருக்கும் என் ரசிகர்களே…

எனக்கு வருத்தமாக இருக்கு. என் ரசிகர்களை இந்த இசை விழாவுக்கு அழைக்க முடியவில்லையே என்று. பிகில் பட இசை விழாவின் போது சில பிரச்சினை ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் கொரோனா வைரஸ் வேற. எனவே தான் அழைக்க முடியவில்லை. அதற்கு மன்னிக்கவும். இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கு ஒரு குட்டி கதை இருக்கு, அனிருத் மற்றும் அருண் காமராஜ் வச்சி செஞ்சிட்டாங்க.

விஜய்சேதுபதி இந்த படத்தோட வில்லன். தமிழ் சினிமாவுல ஒரு தவிர்க்க முடியாத ஆள உருவாகி நிக்கிறாரு.
ஏன் இந்த படத்துல வில்லன் கேரக்டர் பண்ணிறிங்கன்னு விஜய்சேதுபதி கிட்ட கேட்டேன். என்னை நாலே வார்த்தையில ஆஃப் பண்ணிட்டாரு. உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் சொல்லிட்டாரு. மாளவிகாவுக்கு தமிழ் சினிமாவுக்கு ஏற்ற அழகான முகம். அவர் உடனே தமிழ் கத்துகிட்டாரு. நம்ம நண்பர் அஜித் மாதிரி டிரெஸ் பண்ணிட்டு போலம்னு கோட் சூட் போட்டு வந்திருக்கேன்” என்றார் (அப்போது கரவொலி அடங்க வெகு நேரம் ஆனது) என்று பேச்சை தொடங்கியிருக்கிறார் விஜய்.

வாழ்க்கை நதி மாதிரி நம்மள வணங்குவாங்க, வரவேற்பாங்க , கல்லு எரிவாங்க. ஆனா கடமையை செஞ்சுட்டு போயிட்டே இருக்கனும்என்றார் விஜய்

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்