திரைச்செய்திகள்
Typography

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட கோர விபத்து தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் அவசர முறையீடு ஒன்றைச் செய்துள்ளார். அதில், 3 பேர் உயிரிழந்த அந்த விபத்து தொடர்பாக நடித்து காட்டும்படி மத்திய குற்றப்பிரிவு வற்புறுத்துகிறது என தனது அவசர முறையீட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக பிற்பகலில் விசாரிக்க நீதிபதி இளந்திரையன் ஒப்புதல் அளித்துள்ளார்.

விபத்து தொடர்பாக கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பி மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. கடந்த மாதம் 19ஆம் தேதி சென்னை புறநகரானா நசரேத்பேட்டையில் உள்ள ஈ.வி.ஆர் பிலிம் சிட்டியில் போடப்பட்ட செட்டில் கிரேன் ஒடிந்து விழுந்து 3 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்துக்குப்பின் அதை அரசியலாக்கி, கமலஹாசனை அரசியலிருந்தே அப்புறப்படுத்தும்விதமாக, அவரது படக்குழுவிலில் உள்ள மேக்கப் அசிஸ்டெண்ட் வரை விசாரித்து வருகிறது. இதனால் படக்குழுவைச் சேர்ந்த பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று ஒளிந்துவிட்டதாகத் தெரிகிறது.

மாஸ்டர் ரிலீஸ் தள்ளிப்போவதாக திரையரங்க வட்டாரத்திலிருந்து தகவல்கள் வருகிறது. May 22யை lock செய்யசொல்லி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்