திரைச்செய்திகள்
Typography

குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடிப்பது, அதையும் விறுவிறுப்பான படமாக எடுப்பது என்று தனக்கென ஒரு அந்தஸ்த்தை உருவாக்கி வைத்திருக்கிறார் மாநகரம், கைதி, மற்றும் மாஸ்டர் புகழ் லோகேஷ் கனகராஜ்.

இவர்தான் ரஜினியின் அடுத்தப்பட இயக்குனர் என்கிறார்கள். அப்படத்தை கமல் தயாரிப்பதாகவும் தகவல். இதையெல்லாம் உறுதிபடுத்தலாமே என்று லோகேஷை அழைத்தால், ‘ஐயோ சாமீய் ஆளை விடுங்க’ என்று ஓட்டம் பிடிக்கிறார்.

ஏன்? கைதி ரிலீசுக்கு முன்பே விஜய் நடிக்கும் படத்தில் கமிட்டானரல்லவா? எல்லாரும் கைதியை விட்டு விட்டு விஜய் படம் பற்றியே பேச வைத்துவிட்டார்கள் அவரை. இதில் கார்த்தியே அப்செட்டாம்.

உஷாரான விஜய், ‘மாஸ்டர் ரிலீஸ் வரைக்கும் அடுத்த படம் பற்றி மூச் விடக்கூடாது’ என்று கூறிவிட்டாராம் லோகேஷிடம். மூடி வச்ச அகர்பத்தி தேடிப் வந்தாவது நுகர வைக்கும். இப்ப அப்படிதான் நடக்குது!

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்