திரைச்செய்திகள்
Typography

பெரும் சர்ச்சை மற்றும் பரபரப்பைக் கிளப்பிய ‘லட்சுமி’என்ற குறும்படத்தில் நாயகியாக நடித்து வைரலானவர் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி. அதற்கு சற்றுமுன் ‘சுட்ட கதை, ‘முன்தினம் பார்த்தேனே’ என சில படங்களிலும் நடித்திருந்தார்.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் ‘கர்ணன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்குநர் வசந்த இயக்கி, சர்வதேசப் படவிழாக்களில் விருதுகளைப் பெற்றுவரும் ஆந்தாலஜி படமான ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்தில் ஒரு கதையில் நடித்துள்ளார்.

இந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய மூன்று எழுத்தாளர்களின் மூன்று கதைகளை தனித்தனி கதைகளாக எடுத்து மூன்றையும் சரம்போல் இணைத்திருக்கும் இந்தப் படத்தில் லட்சுமி மூன்றாவது கதையில் நடித்துள்ளார். முதல் கதையில் நடித்திருக்கும் மலையாள நடிகையான ‘பூ’ பார்வதி இவரது நடிப்பைப் பார்த்துவிட்டு ‘சான்ஸே இல்ல.. வெற லெவல்’ நடிப்பு என்று பாராட்டினாராம்.

தற்போது ‘கர்ணன்’ படம் தமிழ் சினிமாவில் தனக்கான உண்மையான கணக்கதைத் தொடங்கி வைக்கும் என்று கூறுகிறார் லட்சுமிப்ரியா.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்