திரைச்செய்திகள்
Typography

விஜய் நடித்து முடித்திருக்கும் ‘மாஸ்டர்' படத்தின் பின் தயாரிப்பு வேலைகள் தற்போது நடந்து வருகின்றன. ஆனால், விஜய்யின் 65-வது படத்தை யார் இயக்குவது என்பதில் விஜய் இம்முறை ரொம்பவே குழப்பத்துக்கு ஆளானார்.

கடந்த நான்கு மாதங்களாக நடந்த இயக்குநர் தேடுதல் வேட்டையில், சுதா கோங்கரா தொடங்கி பாண்டிராஜ் வரை 8 இயக்குநர்களிடம் கதை கேட்டு ஓகே செய்திருக்கிறார். ஆனால், இந்த 8 பேருமே ‘மாஸ்டர்’ முடிந்ததுமே உடனடியாக விஜயுடன் இணைந்து பணியாற்றமுடியாமல் திரைக்கதை எழுத 4 முதல் 6 மாத கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள்.

வெறுத்துப்போன விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் தன்னை சந்திக்கக் கேட்டிருந்த நிலையில் அவரைச் சந்தித்துள்ளார். அந்த சமயத்தில் அவர் சொன்ன கதை பிடித்துப்போய்விட உடனே படத்தைத் தொடங்க மொத்த ஸ்கிரிப்டும் இருப்பதைப் பார்த்து, ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஓகே சொல்லிவிட்டாரம். இந்தப் படத்துக்காக ப்ரி புரடெக்ஷன் வேலைகள் தற்போது ஜெட் வேகத்தில் நடந்து வருகின்றன.

கடந்துபோன 2018 தீபாவளிக்கு விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘சர்கார்’ கதைத்திருட்டு சர்ச்சையில் சிக்கி, இழப்பீடு வழங்கியதுடன் எதிர்பார்த்த வெற்றியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்