திரைச்செய்திகள்

பாகுபலி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியான ‘பாகுபலி 2’ திரைப்படத்தின் மூன்று ஆண்டு நிறைவையொட்டி, நடிகர் பிரபாத் ஊடகங்களுக்கு செய்திக் குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'பாகுபலி 2' நம் இந்திய தேசமே விரும்பிய படம் மட்டுமல்ல, என் வாழ்க்கையின் மிகப்பெரிய படமும் கூட.

மேலும், பாகுபலி 2 மூன்று ஆண்டுகளை நிறைவு செய்யும் இத்தருணத்தில், இதை மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்றாக மாற்றிய எனது ரசிகர்கள், படக்குழுவினர் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி ஆகியோருக்கு நான் நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறேன். மேலும் என் மீது அளப்பரிய அன்பு கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும், எனக்கு வாய்ப்பளித்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்கிறேன்’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இவர் கொரோனா நிவாரண நன்கொடையாக ரூபாய் 4 கோடி அளித்திருந்தது நினைவு கூறத்தக்கது.

சுந்தர்.சி.யின் கதாநாயகிக்கு என்ன ஆச்சு ?

சமந்தாவுக்கு 33 வயதா ?

பிரபாஸ் ராஜு உப்பலபட்டி என்று குறிப்பிடப்படும் இவர் கடந்த 2002இல் வெளியான ‘ஈஸ்வர்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானலும் ஆந்திர மக்கள் மத்தியில் 2004-ல் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘வர்ஷம்’ படம் வழியாகவே புகழடைந்தார். அதன்பின்னர் மிர்ச்சி, முன்னா, டார்லிங், மிஸ்டர். பெர்ஃபெக்ட் உள்ளிட்ட பல படங்கள் இவரை பாக்ஸ் ஆபிஸ் மாஸ் நாயகன் ஆக்கின. பாகுபலி, மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களும் இவரை சீனா, ரஷ்யா, ஐரோப்பா உள்ளிட்ட நிலப்பரப்புகளிலும் இவரை அறியச் செய்துள்ளன. நடிகை அனுஷ்கா உடனான தனது காதலை இவர் மறைத்து வருவதாக ஊடகங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன.

சூர்யா குடும்பத்தால் சினிமா அழிந்துவிடாது : கலைப்புலி தானு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்