திரைச்செய்திகள்

53 வயதே ஆகும் இந்தியாவின் பிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகரான இர்பான் கான் உடல் நலக்குறைவால் புதன்கிழமை இயற்கை எய்தியுள்ளார்.

மிகவும் அரிய வகைப் புற்று நோயால் பாதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருவதாக இவர் 2018 ஆமாண்டே அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று திடீரென சுகயீனமுற்றிருந்த நிலையில் மும்பை வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்ட அவர் பெருங்குடல் தொற்றினால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரின் மரணச் செய்தி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களையும், திரைத் துறையினரையும், ரசிகர்களையும் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை தான் இர்பான் கானின் தாயார் சயீதா பேகம் என்பவர் ராஜஸ்தானில் காலமானதாகவும் தெரிய வருகின்றது. 30 ஆண்டுகள் திரைத் துறையில் பணியாற்றி இருந்த இர்பான் கான் தேசியத் திரைப்பட விருது, ஆசியத் திரைப்பட விருது, உட்பட 4 பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

2011 ஆமாண்டு இவருக்குப் பத்மஸ்ரீ விருதை வழங்கி இந்திய அரசு கௌரவித்தது. நூற்றுக் கணக்கான திரைப் படங்களில் நடித்துள்ள இவரது ஹாலிவுட் படங்களில் தி நேம் சேக், ஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் லைஃப் ஆஃப் பை ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்த குறிப்பிடத்தக்க படங்களாகும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்