திரைச்செய்திகள்

மலையாளத்தில் தற்போது மிக பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகி வரும் ‘மரைக்கார் ; அரபிக்கலிண்டே சிம்ஹம்’ என்கிற படத்தில் நடித்துள்ளார் கோமல் சர்மா. பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள இந்தப் படம் குஞ்சாலி மரைக்கார் என்கிற கடற்படை தலைவனை பற்றிய படமாக உருவாகியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் வெளியாக இருந்த நிலையில் கொரோனாவால் வெளியீடு நின்று போய்விட்டது.

இந்தப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கோமல் சர்மா கூறும்போது, “இந்த படத்திற்காக ஆடிசன் வைத்துதான் என்னை தேர்வு செய்தார் இயக்குநர் பிரியதர்ஷன். பொதுவாகவே மோகன்லால் மற்றும் இயக்குனர் பிரியதர்ஷன் ஆகியோரின் படங்களில் ஒருமுறையாவது நடித்து விடவேண்டும் என்பது எல்லோருக்குமே ஒரு கனவாக இருக்கும். அந்த கனவு எனக்கு ஒரே படத்தில் அதுவும் மிகப்பிரமாண்டமான வரலாற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பாக நிறைவேறியுள்ளது என்பதை இப்போது கூட என்னால் நம்பவே முடியவில்லை. சொல்லப்போனால் ஒரு லட்டை எதிர்பார்த்த எனக்கு ஒரே படத்திலேயே மூன்று லட்டு கிடைத்தது.

அந்தப்படத்தின் படப்பிடிப்பில் நடித்த அனுபவமே ரொம்ப வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக கிட்டத்தட்ட 400 படங்களில் நடித்துவிட்ட மோகன்லால் சார், நான் ஒரு வளர்ந்து வரும் நடிகை என்கிற பாகுபாடு எல்லாம் பார்க்காமல் மிக இயல்பாக பழகினார். படத்தில் எனக்கு பெரும்பாலான காட்சிகள் அர்ஜுன் சாருடன் தான் இருந்தாலும், மோகன்லால், நெடுமுடி வேணு உள்ளிட்ட மற்ற அனைத்து நடிகர்களுடனும் நான் நடிக்கும் காட்சிகளும் இருந்தன.

பாகுபலி ராஜமவுலி பாரதப் போரைப் படமாக்க விருப்பம் !

மோகன்லாலை பொருத்தவரை எந்த ஒரு காட்சியையும் ஒரே டேக்கில் ஓகே செய்யக்கூடியவர்.. அதனால் நானும் அவருடன் இணைந்து நடிக்கும் காட்சிகளுக்கு என்னால் எந்தவித இடைஞ்சலும் வந்துவிடக்கூடாது என்பதால் படப்பிடிப்பிற்கு முன்னதாகவே, ஓரளவுக்கு மலையாளம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். இதற்காக தினசரி 2 மணி நேரம் மலையாளம் பேசி பயிற்சி எடுத்தேன். அது படப்பிடிப்பில் ஒரே டேக்கில் காட்சிகளை ஓகே செய்ய எனக்கு ரொம்பவே உதவியாக இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் கூட மலையாள புத்தகத்தை வைத்து ஏதாவது கற்றுக் கொண்டுதான் இருந்தேன். இந்த படத்தில் வரலாற்று கால உடைகள், ஆபரணங்கள், அப்போது பயன்படுத்தப்பட்ட வாள் போன்றவற்றை அணிந்துகொண்டு நடித்தது புது அனுபவமாக இருந்தது.

மரைக்கார் படத்தில் நடிக்கும்போதே மோகன்லால் சார் நடித்த இன்னொரு படமான ‘இட்டிமானி மேட் இன் சைனா’ என்கிற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.. அந்தப்படத்தில் நடிகை ராதிகாவின் மகளாக நடித்து இருந்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இடைவேளை நேரங்களில் நானும் ராதிகாவும் மட்டும் தமிழில் பேசிக்கொண்டே இருப்போம்.. படக்குழுவினர் எங்களை ஆச்சரியமாக பார்ப்பார்கள்..

இது ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பிளான் - பி’

இன்னொரு பக்கம் மரைக்கார் படம் முடிவடைந்ததும் இயக்குநர் பிரியதர்ஷன் இந்தியில் ‘ஹங்கமா-2’ படத்தை தொடங்கினார் இது அவர் ஏற்கனவே 2003-ல் இந்தியில் இயக்கிய ‘ஹங்கமா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.. மரைக்கார் படத்தில் எனது நடிப்பை பார்த்து வியந்து போனவர், இந்த ‘ஹங்கமா-2’ படத்தின் மூலம் இந்தியில் நுழையும் வாய்ப்பையும் எனக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளார். இந்தபடத்தில் ஷில்பா ஷெட்டி, பரேஷ் ராவல் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுடனும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது.

அந்தவகையில் மரைக்கார் படத்தில் நடித்ததன் மூலம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தயாரித்த இன்னொரு படத்திலும், அந்த படத்தின் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிய இன்னொரு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு தானாகவே கிடைத்தது மிகப்பெரிய விஷயம்.. கடுமையான உழைப்பு எப்போதும் வீண் போகாது என்பதை அப்போதுதான் நான் உணர்ந்து கொண்டேன்” என்கிறார் கோமல் சர்மா. இவர் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகைதான். தமிழில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘சட்டப்படி குற்றம்’ படத்தில் அறிமுகமானவர் தான் இந்த கோமல் சர்மா. அதன்பிறகு நாகராஜசோழன் எம்எல்ஏ, வைகை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்தவர். இப்போது இவரை நியாபகம் வந்துவிட்டதா ?

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

அண்ணன் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்து வருகிறார் என்றால், தம்பி கார்த்தியோ உழவன் பவுண்டேஷன் அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

முகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

சுவிற்சர்லாந்தில் பொது மக்கள் வாக்கெடுப்பு என்பது சட்டமியற்றும் அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாகவுள்ளது.

சியான் விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. அஜய் ஞானமுத்து இயக்கிவந்த இந்தப் பிரம்மாண்ட தயாரிப்புக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த சர்ஃபர் மாயா கபீரா எனும் பெண் அலைச் சறுக்கல் போட்டியில் உலக சாதனையை படைத்துள்ளார்.