திரைச்செய்திகள்

சிலரை நேரில் பார்த்தாலோ, பேசினாலோ ; இவர் தேறமாட்டார்’ என்று நினைக்க தோன்றும். ஆனால் அவர்கள் செய்து முடித்த வேலைகளைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். அந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பவர் இயக்குனர் செல்வராகவன்.

அவர் தற்போது தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து.. அந்த சிறுவன் செல்வராகவனுக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், அதில்;

''அன்புள்ள செல்வா, 14 வயதில் உன் தோற்றத்தை பார்த்து இந்த உலகம் சிரிச்சுது. ஏனெனில் உன் கண் குறைபாடு காரணமாக. எங்கே நீ சென்றாலும் உன்னையே பார்த்தாங்க. சில பேர் கிண்டல் செஞ்சாங்க... ஒவ்வொரும் இரவும் அதை நெனைச்சு நீ அழுதிருக்கிறாய். சில நேரங்களில் கடவுளிடம், ஏன் எனக்கு மட்டும் ? ஏன் என் கண்ணை எடுத்துக்கொள்ளக் கூடாது ?, அப்படீன்னு கதறி இருக்கே.

ஆனால் கவலைப்படாதே செல்வா, சரியாக 10 வருடங்களுக்கு பிறகு நீ ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்குவாய். அது உன் வாழ்வை மாற்றும். அப்பொழுது உலகம் உன்னை பார்க்கும். ஆனால் இந்த முறை மரியாதையுடனும் போற்றுதலுடனும் பார்க்கும். அடுத்த பத்து வருடங்களில் தமிழ் சினிமாவின் வரலாற்றில் டிரெண்ட் செட்டரான கல்ட் கிளாஸிக் படங்களை உருவாக்கியிருப்பாய்.

மக்கள் உன்னை ஜீனியஸ் என்று அழைப்பார்கள். இப்பொழுது மக்கள் உன்னை பார்ப்பார்கள். ஆனால் உன் சிறுவயதில் கவலைக் கொள்ளச் செய்த கண்ணிற்காக அல்ல. நீ உருவாக்கிய படங்களின் மூலம் அவர்களின் வாழ்க்கையை மாற்றிய ஒருவனை பார்ப்பாங்க. அதனால் தைரியமாக இரு. கடவுள், உன்னிடம் இருந்து விலை மதிக்க முடியாத ஒன்றை எடுத்துக்கொண்டால், அவர் உன்னிடம் மிகுதியாக திருப்பி அளிப்பார். அதனால் உற்சாகமாக இரு.

புகைப்படங்கள் எடுக்கும் போது சிரி ( நீ சிரித்துக்கொண்டிருக்கும் படியான புகைப் படங்களை எப்பொழுதும் பார்த்தது இல்லை) ஏனெனில் பின் நாட்களில் உன்னை அதிக புகைப்படங்கள் எடுக்கப்பட வேண்டியிருக்கும்.

உன்னை நேசி.

என செல்வராகவன் இந்த 45 வயதில் ஃபீல் பண்ணி எழுதி இருக்கும் கடிதம் அவரது ஊரடங்கு காலத்தின் விளைவு என தோன்றுகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் எதிர்பாராமல் நிகழ்ந்த கோர விபத்தால் உதவி இயக்குநர் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.