திரைச்செய்திகள்

இயக்குநர் ராஜமவுலி இயக்கும் பெரும்பான்மையான படங்களுக்கு இசை அமைத்தவர் தெலுங்கு இசையமைப்பாளர் கீரவாணி. அதற்குக் காரணம், கீரவாணி ராஜமௌலியின் உறவினர் என்ற உண்மையைத் தாண்டி, அவரை தெலுங்கு சினிமாவின் இளையராஜா என ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு இசையமைத்து வருபவர்.

‘இளையராஜாவின் பாடல்களைக் கேட்டே நான் சினிமாவுக்கு இசையமைக்க வந்தேன். நான் அவரது மூத்த ரசிகர்களில் ஒருவன்’ என கீரவாணி தனது பேட்டிகளில் மறக்காமல் குறிப்பிடுவார். மரகதமணி என்ற பெயருடன் பல தமிழ்ப் படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்.

தற்போது தெலுங்குத் திரையுலகில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கும் கீரவாணிதான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரன், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஊரடங்கு காரணமாக ஆர்.ஆர்.ஆர். படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடும் இசையமைப்பாளர் கீரவாணி, ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் ‘விரைவில் திரையிசையிலிருந்து விலகி ஓய்வுபெற விரும்புகிறேன். ஆர்.ஆர்.ஆர் படமே எனது இசையமைப்பில் வெளியாக இருக்கும் கடைசிப் படமாக இருக்கும்’ என்று அதிரடியாக அறிவித்திருக்கிறார். கீரவாணியின் ரசிகர்கள் இதற்காக கதறி வருகிறார்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடிகை’யை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானர் 35 வயது இயக்குநர் நாக் அஷ்வின்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது